விருமாண்டி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை அபிராமி இதை தவிர சார்லி சாப்ளின் , சமுத்திரம், தோஸ்த், வானவில், உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார் . கோலிவுட் சினிமாவை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்து இருக்கிறார் . சமீபகாலமாக இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் நடிகை அபிராமி “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்”என்று கூறியுள்ளார் .
“அது மட்டுமின்றி தன்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள் என்றும் சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம்” என்று அபிராமி கூறியுள்ளார்.